Jaffna Marathon

Jaffna Marathon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jaffna Marathon, Sports Event, Jaffna.

19/10/2021

கிளைமத்தோன் யாழ்ப்பாணம் நிகழ்வினை முன்னிட்டு நடாத்தப்படும் புகைப்படங்களூடாக கதை சொல்லும் போட்டி

20,000ரூபா வரையிலான பணப்பரிசில்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கான சான்றிதழ்கள்

போட்டி முடிவுத் திகதி 30.10.2021 நள்ளிரவு 12.00 மணி

முழுமையான விபரம் அறிய https://www.climathonjaffna.com/clickr

26/09/2021
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்  🙏
13/04/2020

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏

21/08/2019

உலகின் புகழ்பூத்த லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகும் ஈழத்தமிழர்.............................................................................
யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் நிஷான் கனகராஜா எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி தொடக்கம் செயற்படும்படியாக பிரித்தானியாவின் லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் பெறுகின்றார்.

உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் 2018 ஆம் ஆண்டுத் தரவுகளின் படி லெஸ்டர் பல்கலைக்கழகம் 167 ஆம் இடத்தில் உள்ளது. பிரித்தானியாவில் 25 ஆம் இடத்தில் உள்ளது.

பேராசிரியர் கனகராஜா 1985 ஆம் ஆண்டு கணிதத்துறையில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி நான்கு பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று கேம்பிறிஜ் பல்கலைக்கழத்திற்குத் தெரிவாகிக் கல்வியைப் பெற்றவர் ஆவர்.

1966 இல் சுண்டிக்குளியில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவின் தந்தை கனகராஜா யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் ஆசிரியராகவும் தாய் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் ஆசிரியையாகவும் இருந்தவர்கள் ஆவர்.

எங்களுக்கு மூத்தவராகப் பாடசாலையில் கல்வி பயின்ற பேராசிரியருக்கு இனிய நல்வாழ்த்துகள்.

லெஸ்ரர் பல்கலைக்கழக இணையத்தளத்தைப் பார்வையிட...
https://le.ac.uk/news/2019/august/20-new-vice-chancellor-named

இதேவேளை சென் ஜோன்ஸ் கல்லூரியில் 1985 ஆம் ஆண்டின் உயர்தரப் பிரிவில் கற்ற பேராசிரியர் றமா திருநாமச்சந்திரன் பிரித்தானியாவின் Canterbury Christ Church University இல் துணைவேந்தராக உள்ளார் என்பதுவும் குறி்ப்பிடத்தக்கது.

www.sirakukal.media

10/07/2019

நவாலியூர் சோமசுந்தரப் புலவர்
அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு சிறகுகள் ஊடகத்தினூடாக ( www.Sirakukal.media) நடாத்தப்படும் கவிதை போட்டியானது “தங்கத்தாத்தா” எனும் தலைப்பில் நடத்தப்படுகிறது.

ஆக்கங்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கூடாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

விண்ணப்ப இறுதி திகதி 16/07/2019

08/07/2019

மோட்டார் வாகன போக்குவரத்து சட்டம்
(2019ஆம் ஆண்டு 10ஆம் இலக்கம் திருத்த சட்டம்) அமுலுக்கு வருகின்றது.

01. 18 வயதினை அடைய முன்னர் எந்த ஒரு நபருக்கும் இலகு ரக வாகனம் (light vehicle) ஒன்றினை வீதியில் செலுத்த முடியாது. மேலும் 21 வயதினை அடைய முன்னர் எந்த ஒரு நபருக்கும் கன ரக வாகனம் (heavey vehicle) ஒன்றினை வீதியில் செலுத்த முடியாது.

02. சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் ஒன்றினை முதல் தடவையாக செலுத்துவது ரூபா 25,000/=இற்கு குறையாததும் ரூபா 30,000/=இனை விஞ்ஞாத தண்டப்பணத்தை அறவிடக்கூடிய குற்றமாகும். இரண்டாவது தடவையாக அதே குற்றத்தினை செய்யும் போது ரூபா 30,000/= இற்கு குறையாததும் ரூபா 50,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும்.

03.குறிப்பிட்ட அளவை விட அதிக வேகமாக வாகனத்தினை செலுத்துதல்
(அ).குறிப்பிட்ட அளவைவிட 20% அதிகமான வேகத்தில் வாகனத்தை செலுத்தினால் ரூபா 3,000/=இற்கு குறையாயதும் ரூபா 5,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும்.

(ஆ) குறிப்பிட்ட அளவைவிட 20% முதல் 30% வரை அதிகமான வேகத்தில் வாகனத்தை செலுத்தினால் ரூபா 5,000/=இற்கு குறையாததும் ரூபா 10,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும்.

(இ) குறிப்பிட்ட அளவைவிட 30% முதல் 50% வரை அதிகமான வேகத்தில் வாகனத்தை செலுத்தினால் ரூபா 10,000/=இற்கு குறையாததும் ரூபா 15,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும்.

(ஈ) குறிப்பிட்ட அளவைவிட 50% வரை அதிகமான வேகத்தில் வாகனத்தை செலுத்தினால் ரூபா 15,000/=இற்கு குறையாததும் ரூபா 25,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும். இந்த தண்டப்பணம் அவ்விடத்திலே அறவிடப்படும் தண்டப்பணத்திற்கு (spot fine) இற்கு மேலதிகமாக அறவிடப்படும்.

04.ரயில்வே கடவைக்கு(Railway Cross மேலாக வாகனத்தை முதல் தடவையாக ஓட்டுதல்
ரூபா 25,000/=இற்கு குறையாததும் ரூபா 30,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும். அதே குற்றத்தை இரண்டாவது தடவையாக செய்யும் போது ரூபா 30,000/=இற்கு குறையாததும் ரூபா 40,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படுவதோடு சாரதி அனுமதிப்பத்திரம் 6மாதங்களுக்கு தற்காலிகமாக தடை செய்யப்படும் .அதே குற்றத்தை மூன்றாவது முறையாக செய்யும் போது ரூபா 40,000/=இற்கு குறையாததும் ரூபா 50,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படுவதோடு சாரதி அனுமதிப்பத்திரம் 12 மாதங்களுக்கு தற்காலிகமாக தடை செய்யப்படும் .

05.வாகனம் ஒன்றினை செலுத்தும் போது கையடக்க தொலைபேசியோ அல்லது வேறு ஏதும் சாதனங்களையோ பயன்படுத்தினால் அல்லது கையடக்கத்தொலைபைசியில் பேசினால் முதல் தடவையாக செய்யும் போது ரூபா 2, 500/=இற்கு குறையாததும் ரூபா 7,500/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும். அதே குற்றத்தை இரண்டாவது தடவையாக செய்யும் போது ரூபா 7,500/=இற்கு குறையாததும் ரூபா 15,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும்.அதே குற்றத்தை மூன்றாவது முறையாக செய்யும் போது ரூபா 15,000/=இற்கு குறையாததும் ரூபா 25,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும். இந்த தண்டப்பணம் அவ்விடத்திலே அறவிடப்படும் தண்டப்பணத்திற்கு (spot fine) இற்கு மேலதிகமாக அறவிடப்படும்.

06.குடி போதையில் வாகனம் ஒன்றினை செலுத்தினால் ரூபா 25,000/=இற்கு குறையாததும் ரூபா 30,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும்.அல்லது 3மாதம் சிறைத்தண்டனை நியமிக்கப்படும். அல்லது சிறைதண்டனை மற்றும் தண்டப்பணம் ஆகிய இரண்டும் நியமிக்கப்படுவதோடு சாரதி அனுமதிப்பத்திரம் 12 மாதங்களுக்கு தற்காலிகமாக தடை செய்யப்படும்.

07.காப்புறுதி சான்றிதல் பத்திரம் இல்லாமல் வாகனத்தை செலுத்தினால் ரூபா 25,000/=இற்கு குறையாததும் ரூபா 50,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும்.அல்லது 1 மாதம் சிறைத்தண்டனை நியமிக்கப்படும். அல்லது சிறைதண்டனை மற்றும் தண்டப்பணம் ஆகிய இரண்டும் நியமிக்கப்படும்.

05/06/2019

சிறகுகளின் "நாணல்" செயற்றிட்டம் ஆரம்பம்

சிறகுகள் அமையத்தினரின் ஏற்பாட்டில் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான தொடர் கணித, விஞ்ஞான,ஆங்கில செயற்றிம் "நாணல்" கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, இரத்தினபுரி மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

குறித்த செயற்றிட்டத்தின் ஆரம்ப கட்டமாக மன்னார் நறுவிலிக்குளம் அ.த.க பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாம் கட்டமாக பழுகாமம் விபுலானந்தா சிறுவர் இல்ல மாணவர்களுக்கான கணித பாட செயலமர்வு 05.06.2019 புதன்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

தொடர்சியாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளுக்கான செயலமர்வுகள் நடைபெறவுள்ளது.

"கல்வி எங்கள் மூலதனம்"

#சிறகுகள் #நாணல்

Thank you all for the excellent support & your participation at the jaffna Marathon -2016 held on 05 March 2016 See you ...
17/03/2016

Thank you all for the excellent support & your participation at the jaffna Marathon -2016 held on 05 March 2016 See you all at jaffna marathon 2017Cheers!!!! :) :)

05/03/2016

Jaffna marathon-2016

Winners

Open Seniors 21 KM

Men
1. I.Jeyantha - Jaffna
2. K.Navaneethan - Vavuniya
3. C.Thivakaran - Vavuniya

Women
1. R.Charlini - Vavuniya
2. P.Dharshika - Nedunthivu
3.K.Kokilavani - Vavuniya

Juniors ( Under 18_ 7 KM

Men
1. P.Jenanathana - ODDUSUDDAN
2 E. Anujan - Kilinochchi
3. S.Nirmal - Kilinochi

Women
1.S.Vuthusha - Oddusuddan
2.I.Puvithini - Oddusuddan
3. T.Dinsika - Kilinichchi.

Address

Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna Marathon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category