Thottiyam Thiruvizha

Thottiyam Thiruvizha Thottiyam Maduraikaliyamman Ther thiruvizha is a greatest function of Thottiyam, Trichy Dist. Email id [email protected]
Ph.no 04326-254926

அருள்மிகு ஸ்ரீ மதுர காளியம்மன் துணை

மதுரகாளியம்மன் கோயில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள தொட்டியம் ஊரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் மதுரகாளியம்மன் உள்ளார். வெண் குதிரை வாகனம் பலிபீடத்திற்கு அருகே உள்ளது. மதுரை வீரன் சந்நிதியும் இத்தலத்தில் உள்ளது.

தலபுராணம்

சின்னானின் பறை இசையில் மயங்கிய மதுரை காளி, அவனுடன் அவன் ஊரான தொட்டியத்திற்கு வர சித்தம் கொண்டு, ஈ வடிவெடுத்துச் சென்றாள். சின்

னான் மாடுகள் மேய்க்கும் பொழுது அடிக்கும் பறை இசையை தினமும் ஆனந்தித்துக் கேட்டாள். ஒருநாள் அப்பகுதியை ஆண்ட குறுநில மன்னரின் சகோதரன் குதிரையில் வந்தபோது குதிரையின் குளம்படி பட்டு, புதரிலிருந்த புற்று சிதைந்தது. புற்றிலிருந்த அன்னை கோபமுற்றதால், சகோத ரன் அந்த கணமே மதி இழந்தான். செய்வதறியாது திகைத்த மன்னரின் கனவில் தோன்றிய மதுரை காளி, மதுரையில் இருந்து இசைக்கு மயங்கி வந்து தொட்டியத்தில் தான் சங்கமித்துள்ளதை சொன்னாள். உடனே அரசன் காளிக்கு திருக்கோயில் எழுப்பி உற்சவம் நடத்தினான். சகோதரனின் சி த்தமும் தெளிந்தது. பறையடிக்கும் தொழிலை மேற்கொண்டிருந்த சின்னானுக்கும், அவன் சகோதரன் செல்லானுக்கும் கோயிலினுள் சிலை அமைத் தான். எதிரிகளால் ஏற்படும் துயரம் நீங்க தொட்டியம் மதுரை காளியம்மனை வடைமாலை சாற்றி வழிபடலாம். திருச்சி-முசிறி வழியாக நாமக்கல் செல் லும் சாலையில் தொட்டியம் அமைந்துள்ளது.

தேர் திருவிழா

மதுரகாளியம்மனுக்கு நடைபெறும் திருவிழாவும், தேரோட்டமும் முக்கியமானவையாகும். தை மாதம் இரண்டாம் தேதி முகூர்த்தம் செய்யப்பட்ட நாளிலிருந்து திருவிழா ஏற்பாடுகள் தொடங்கி, பங்குனி மாதம் தேரோட்டம் முடியும் வரை தொட்டியம் அமர்க்களப்படும. இந்த விழாவின் முக்கியமானது இரட்டைத் தேரோட்டம். பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும் 32 அடி உயரம் கொண்ட பெரிய தேர், 30 அடி உயரம் கொண்ட சிறிய தேர், இரண்டும சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு வீதியுலா வரும். தமிழகத்திலேயே தோளால் தூக்கிச் செல்லப்படும் மிக உயரமான தேர் இதுவாகத் தான் இருக்கும். இரண்டு தேரும் ஒரே நேரத்தில் வீதிவலம் வருவதால், சுமார் 200பேர் தேரைச் சுமந்து செல்கின்றனர்.

இந்த இரு தேர்களையும் தூக்குவதற்காகவே கவுத்தரசநல்லூர், சித்தூர், அரங்கூர், கிளிஞ்சநத்தம், அயினாப்பட்டி, ஏரிகுளம், பாலசமுத்திரம், தொட்டியம் கோட்டமேடு, சந்தப்பேட்டை, கொசவம்பட்டி, காமலாபுரம்புதர், தோளூர்பட்டி, ஏலூர்பட்டி, குண்டுமனிப்பட்டி, மாராச்சிப்பட்டி, உடையாளம்புத்தூர், நத்தம், புத்தூர், தொட்டியப்பட்டி,கார்த்திகைப்பட்டி என 18 பட்டி கிராம மக்கள் திருவிழாவில் ஒன்று கூடுகின்றனர். சிறிளய தேரில் மதுர காளி அம்மனும், பெரிய தேரில் ஓலைப்பிடாரிகளும் எழுந்தருளி வீதிகளில் வலம் வருவர். Thottiyam is a panchayat town in Tiruchirappalli district in the Indian state of Tamil Nadu. It is a town in Tiruchirappalli District, situated 80 km north-west of Tiruchirapalli on Tiruchy - Salem- Bangalore National Highway. It is located near the Kaveri River, about 12 km north-west of Musiri. The main temple of this small town is Madurai Kali Amman, and the main festival in March is worth visiting and watching. Thottiam is essentially an agricultural area; its main crops are paddy, plantains and petals. Large quantities of plantains and petals are sent to other States, including exports to Middle East. About 500 years back King Esanakarayar ruled this area. Chinnan, a servant who worked in his stable, wants to go to Kali Festival at Madurai. He got permission from the King and he went to Madurai with his “Parai”, a musical drum and stayed at his brother-in-laws houses. Next day he went to Kali temple and began to play “Parai” rhythamically. Goddess Kali admired by the music of chinnan and followed him back to Thottiam and Goddess Kali seated under the “Vanni” tree. Latter a temple was constructed by Pujankrayar at this place. This temple is surrounded by lush green fields. There is a 3 tier tower, 27 pillar mandapam and a 5 pillar Arthamandapam gives notorious look to this temple. Many beautiful sculptures are carved inside the temple. The name of the Goddess is Madurai Kaliamman and the Thalavirusham is “Vanni” tree.

திருச்சி மாவட்டம் தொட்டியம் (கௌத்தரசநல்லூர்) அருள்மிகு மதுரைகாளியம்மன் திருக்கோயிலில் இன்று 21:04:2026 செவ்வாய் கிழமை பங...
21/04/2026

திருச்சி மாவட்டம் தொட்டியம் (கௌத்தரசநல்லூர்) அருள்மிகு மதுரைகாளியம்மன் திருக்கோயிலில் இன்று 21:04:2026 செவ்வாய் கிழமை பங்குனி பெருந்தேர் விழா நிறைவடைந்ததை முன்னிட்டு அருள்மிகு விநாயகர் மூலவர் அருள்மிகு மதுரைகாளியம்மன் அருள்மிகு மதுரைவீரன்சுவாமி அருள்மிகு கருப்பண்ணசுவாமி மற்றும் பரிவாரதெய்வங்கள் அருள்மிகு காத்தவராயன் அருள்மிகு சின்னான் சுவாமிகளுக்கு சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது பக்தர்கள் கலந்து கொண்டு எல்லாம் வல்ல மதுரைகாளியம்மன் அருளை பெற அன்புடன் அழைக்கின்றோம்

15/04/2026

Address

Thottiyam
Thottiyam
621215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thottiyam Thiruvizha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thottiyam Thiruvizha:

Share

Category