Young Brothers Sports Club

Young Brothers Sports Club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Young Brothers Sports Club, Sports Event, Nagercoil.

11/01/2021
சரல் விளை YOUNG BROTHERS SPORTS CLUB சார்பாக நம் நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு சரல்விளை சந்திப்பில் வைத்து தேசியக...
15/08/2018

சரல் விளை YOUNG BROTHERS SPORTS CLUB சார்பாக நம் நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு சரல்விளை சந்திப்பில் வைத்து தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. முன்னாள் இராணுவ வீரர் கலந்து கொண்டு கொடியேற்றி இனிப்பு வழங்கினார். இவ்விழாவில் கிளப் செயலாளர் தனிஷ் தலைமை தாங்கினார். கிளப் பொருளாளர் நிஷாந்த், துணை தலைவர் தினேஷ், துணை செயலாளர்கள் அஜி, ரமேஷ், முன்னாள் தலைவர்கள் விஜய குமார், ஷாபி, சத்ய ஸ்டிபன், முன்னாள் செயலாளர்கள் சஜின், ஒபேத், செயற்குழு உறுப்பினர்கள் அர்ஜுன், ஜெபர்சன், அஸ்வின், வினு , ஆல்டன், சுஜித், T.சதிஷ், E .ஷஜு, அஜித், சம்பத், டெனால்ட், ஆகாஷ் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

01/06/2018

அறிவுப்பு:-
10.6.2018 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு கிளப் கூட்டம் நடைபெறும். அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
இவண் :-
T. தனிஷ் (கிளப் செயலாளர்)

22/03/2018

அன்பு நண்பர்களே,
நமது YOUNG BROTHERS SPORTS CLUB ன் 7 வது ஆண்டு விழாவானது இன்னும் 8 நாட்களில் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளை விட அதிகமான கிளப் உறுப்பினர்கள் இந்த ஆண்டு JERCY க்கு பெயர் கொடுத்து உள்ளார்கள். மொத்தம் 56 பேர் பெயர் கொடுத்து அதற்கான ORDER கொடுக்கபட்டு உள்ளது. நம் பகுதியிலுள்ள ஒட்டுமொத்த இளைஞர்களையும் அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி இணைக்கும் ஒரு 'புள்ளி' யாக சிறப்பாக செயல்பட்டு வருவதற்கான உதாரணம் தான் இத்தனை நண்பர்கள் JERCY ORDER செய்வதற்கு காரணம். இந்த CLUB எந்த நோக்கத்திற்காக துவங்க பட்டது என்ற காரணம் இதில் பலருக்கு தெரியாமல் கூட இருக்கலாம். காரணம் தெரிந்தவர்களுக்கு தெரியும், நாம் ஒன்றுபட்டு துவங்கிய இந்த CLUB ன் ஆண்டு விழாக்கள் ஆரவாரமாக 2 நாட்கள் நடந்து, அமைதியாக முடியும் அந்த நொடிகளில் ஒவ்வொரு உறுப்பினர்களின் முகங்களை பார்க்கும் போது ஏதோ ஒரு திருப்தி, ஒரு சந்தோசம். மீண்டும் அதே போன்ற ஒரு திருவிழா இன்னும் ஒரு வாரத்தில் வர இருக்கிறது. எல்லா வருடத்தை போல் இந்த வருடமும் சிறப்பாக நடை பெற நாம் அனைவரும் ஒருமித்து, ஒத்துழைத்து, நன்கொடை வழங்கி உரிமையோடு கலந்து கொள்வோம்.
இவண் :-
M.விஜயகுமார் (கிளப் உறுப்பினர்)

அறிவிப்பு :-     Jercy க்கு 300 ௹பாய் 11.03.2018 ஞாயிற்றுகிழமைக்குள் கிளப் து.செயலாளர் நிஷாந்த் அவர்களிடம் கொடுக்குமாறு ...
02/03/2018

அறிவிப்பு :-
Jercy க்கு 300 ௹பாய் 11.03.2018 ஞாயிற்றுகிழமைக்குள் கிளப் து.செயலாளர் நிஷாந்த் அவர்களிடம் கொடுக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

முதல் வருட பசுமை நினைவுகள்
02/03/2018

முதல் வருட பசுமை நினைவுகள்

02/03/2018

முக்கிய அறிவிப்பு :-
YOUNG BROTHERS SPORTS CLUB ன் 7-வது ஆண்டு விழா வரும் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய இரு தினங்களும் சிறப்பாக நடைபெற இருக்கிறது. எனவே கிளப் உறுப்பினர்கள் அனைவரும் மார்ச் 1 முதல் கிளப் வேலைகளில் தீவிரமாக ஈடுபடுமாறு உங்களை பணிவோடு கேட்டு கொள்கிறோம். குறிப்பாக விளையாட்டு போட்டிகளின் முன்னேற்பாடு, நிதி வசூலித்தல், பொது மக்களிடம் பரிசு உபயம் பெறுதல், Jercy கான காசு அளித்தல் போன்ற பணிகளில் ஈடுபடுமாறு உங்களை கேட்டுகொள்கிறோம். மேலும் அனைத்து கிளப் உறுப்பினர்களும் நன்கொடை வழங்குமாறும், வெளிநாடுகளில் உள்ள உறுப்பினர்களும் நன்கொடை தருமாறு தாழ்மையோடு கேட்டு கொள்கிறோம். நிர்வாகிகள் தங்களுக்கு கொடுக்கபட்ட பொறுப்புகளில் சிறப்பாக செயல்படுமாறும் கேட்டு கொள்கிறோம். அனைவரும் ஒன்றிணைந்து 7 வது ஆண்டு விழாவை சிறப்பாக நடத்த முன்வருவோம்..
...நன்றி...

Address

Nagercoil
629164

Telephone

9787145724

Website

Alerts

Be the first to know and let us send you an email when Young Brothers Sports Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category