20/11/2025
சுசீந்திரம் தெப்பக்குளம் — பலரையும் கவலைக்குள்ளாக்கும் சம்பவம்!
தெப்பக்குளம் தூர்வாரும் பணி பொதுவாக கோடைக்காலத்தில் தான் நடைபெறும். ஆனால் இந்த முறை மழைக்காலத்தில் நடைபெற்ற தூர்வாரும் பணியின் காரணமாக, பழமை வாய்ந்த தெப்பக்குளம் இன்று சேதமடைந்துள்ளது.
🔸 JCB மூலம் அதிகமாக மண் அள்ளப்பட்டதாக
🔸 தேவையற்ற அளவில் தோண்டப்பட்டதாக
அருகில் உள்ளோர் தெரிவித்துள்ளனர்.
இதனால் சுவர்ச் சரிவு போன்ற அபாய நிலை உருவாகியுள்ளது. இது குறித்து:
ஒப்பந்தக்காரர்?
கோவில் நிர்வாகம்?
அல்லது பஞ்சாயத்து?
யார் பொறுப்பேற்க வேண்டும்? என்பது மக்கள் மத்தியில் எழும் பெரிய கேள்வியாக உள்ளது.
📢 தமிழ்நாடு அரசு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை உடனடியாக தலையிட்டு, முழுமையான விசாரணையும், தேவையான சரிசெய்தல்களும் மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை.