திராவிடர்திருநாள்

திராவிடர்திருநாள் திராவிடர் திருநாளாம் பொங்கல் திருநாளன்று 'பெரியார்' பெயரில் விருது

1995 ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து இயல், இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள சமூகத்தின் முற்போக்கு வளர்ச்சிக்கு செயலாற்றும் தமிழர்களைத் தெரிந்தெடுத்து திராவிடர் திருநாளாம் பொங்கல் திருநாளன்று 'பெரியார்' பெயரில் விருது வழங்கி வரும் 'தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம்'

இன்று 17.01.2026 பெரியார் திடலில் திராவிடர் திருநாள் & பெரியார் விருதுஅனைவரும் வருக! வருக!!
17/01/2026

இன்று 17.01.2026 பெரியார் திடலில்
திராவிடர் திருநாள் & பெரியார் விருது
அனைவரும் வருக! வருக!!

2026 ஆம் ஆண்டுக்கான 'பெரியார் விருது'தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 32 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் கலை, இலக்கியம், அறிவிய...
14/01/2026

2026 ஆம் ஆண்டுக்கான 'பெரியார் விருது'

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 32 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் கலை, இலக்கியம், அறிவியல், சமூகப்பணி, விளையாட்டு, சூழலியல்,, தொழில், கல்வி போன்ற பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் பெருமக்களுக்கு 'பெரியார் விருது' வழங்கிச் சிறப்பித்து வருகிறது.

அந்த வகையில் இருவருக்கு 2026 ஆம் ஆண்டுக்கான 'பெரியார் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நீதிச் சிந்தனையுடன் செயல்பட்டு தமது படைப்புகளால் பல்வேறு சமூக அவலங்களை வெளிப்படுத்தி வரும் எழுத்தாளர் பெருமாள்முருகன் அவர்களுக்கும், தமது திரைப்படங்களால் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரலை ஓங்கி ஒலித்து, முற்போக்குச் சிந்தனையுடன் செயல்பட்டு சாதனைகள் படைத்து வரும் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கும் வழங்கப்படவிருக்கிறது.

இந்த விருது சென்னை பெரியார் திடலில் ஜனவரி 17 சனி மாலை 4 மணியளவில் தொடங்கி நடைபெறவுள்ள திராவிடர் திருநாள்- தமிழ்ப் புத்தாண்டு.

பொங்கல் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் வழங்கப்பட உள்ளது.

#பெரியார்விருது2026

Address

No 84/1, EVK Sampth Road , Periyar Thidal, Vepery
Chennai
600007

Alerts

Be the first to know and let us send you an email when திராவிடர்திருநாள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to திராவிடர்திருநாள்:

Share

Category