06/07/2025
பால்புது (LGBTQIA+; பாலினம் மற்றும் பாலீர்ப்பு சிறுபான்மையினர்) சமூகத்தினரின் குறைகளை கேட்டு, அதைப் பற்றி பொதுவெளியில் பேசியதற்கு முனைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். முனைவர் திருமாவளவன் அவர்களும், விசிக கட்சியும், பிற முற்போக்கான குரல்களும் எங்கள் உரிமைகள், கண்ணியம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான போராட்டங்களில் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறோம். பாலபுதுமையினர்களின் வாழ்வியல், போராட்டங்கள், அரசியல் பற்றிய கற்றல் மிகவும் அவசியமாகிறது. அதற்காக விசிக தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் விரும்புகிறோம். அனைத்து மட்டங்களிலும், குறிப்பாக சாதி, பால்புதுமை, அடையாளம் மற்றும் பிரதிநிதித்துவத்தின் குறுக்குவெட்டுகளில், மிகவும் முக்கியமான இந்த உரையாடலை உருவாக்க உதவ QCC ஆர்வமாக உள்ளோம்.
We thank Dr. Thol Thirumavalavan for listening to the concerns of the q***r community, and taking steps to address it publicly. We hope Dr. Thiruma, the party and other progressive voices continue to support the q***r community in our struggles for rights, dignity and political representation. A lot of learning and unlearning is needed and we are more than happy to work with VCK's leaders in charting that path ahead. QCC is also happy to address VCK party members in helping build more sensitive dialogue at all levels, especially the intersections of caste, q***rness, identity and representation.