14/12/2022
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (14.12.2022) தலைமைச் செயலகத்தில், சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் சார்பில் பெரு நாட்டின், லிமா நகரில் 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 25 மீட்டர் Standard Pistol தனிப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி நிவேதிதா அவர்களுக்கு 4 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்வின்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.