16/10/2023
#இரண்டாமிடத்தினைப் #பெற்றுக் #கொண்டது #செம்மலை #உதயசூரியன் 🏆⚽🥈🥈🥈🥈🥈
🎖️ #அலையோசை 🆚 #உதயசூரியன்
இன்றைய தினம் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் எமது அணியினர் #தனுராஜ் அடித்த கோலுடன் தமது முதல் கோலினைப் பதிவு செய்தார்கள். பின்னர் அலையோசை அணியினர் தொடர்ந்து 2 கோல்களைப் பெற்றுக் கொள்ள 2 க்கு 1 என்ற நிலையில் இடைவேளைக்காக போட்டி நிறுத்தப்பட்டிருந்தது.
🎖️தொடர்ந்து, இரண்டாவது பாதியாட்டத்தில் அலையோசை அணியினருடைய ஆதிக்கம் தொடர்ந்தது. இன்னுமொரு கோலினை அலையோசை அணி பெற்றுக் கொள்ள 3 க்கு 1 என ஆட்டம் தொடர்ந்தது. பின்னர் தமக்கு கிடைத்த தண்ட உதையினை சரியாகப் பயன்படுத்தி மேலும் ஒரு கோலினைப் பெற அலையோசை அணியினர் 4 க்கு 1 என முன்னிலை பெற்றனர். தொடர்ந்து ஒண்கோல் முறையூடாக அலையோசை அணிக்கு இன்னுமொரு கோல் கிடைக்க 5:1 என்ற கோல் கணக்கில் அலையோசை அணியினர் முன்னிலையிலிருந்தனர்.
🎖️இச் சந்தர்ப்பத்தில், எமது அணியினர் போட்டி வியூகங்களை மாற்றி மிகவும் விறுவிறுப்பான முறையில் விளையாடி இறுதி 20 நிமிடங்களும் மிகவும் சிறப்பான முறையில் விளையாடியிருந்தனர். அதன் பயனாக #மோகன்றாஜ் ஒரு கோலினைப் பெற்றுக் கொடுக்க 5:2 என்ற நிலையில் போட்டி விறுவிறுப்படைந்தது. தொடர்ந்து கோல் போடுவதற்கான பல சந்தர்ப்பங்கள் எமது அணியினருக்கு கிடைத்த போதும் அவை கைநழுவிப் போயிருந்தன. இறுதியில் உடுப்புக்குளம் அலையோசை அணியினர் 5⃣➖2⃣ என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியிருந்தார்கள்.
#போட்டியில் #வழங்கப்பட்ட #விருதுகள்
🏆🎖️🏆🎖️🏆🎖️🏆🎖️🏆🎖️🏆🎖️🏆🎖️🏆🎖️
🏅மக்கள் மனங்கவர் வீரன்➖ #மோகன்றாஜ் உதயசூரியன் வி. க
🏅சிறந்த அணி➖ இரணைப்பாலை #சென்அன்ரனிஸ் வி. க
🏅தொடராட்ட நாயகன் ➖ #பிரபாகரன் (கபிலன்) அலையோசை வி. க
🏅ஆட்டநாயகன் ➖ #மயூரன் அலையோசை வி. க
🏅சிறந்த கோல் காப்பாளர் ➖ #சாருதன் உதயசூரியன் வி. க
🏅அதிக கோல்களைப் பெற்றுக் கொண்ட வீரர்➖ #பிரபாகரன் 7⃣ கோல்கள் அலையோசை வி. க
🏅சிறந்த பின்கள வீரன்➖ #துசியந்தன் அலையோசை வி. க
🏅சிறந்த மத்தியகள வீரன்➖ #வேணுதாஸ் உதயசூரியன் வி. க
🏆நான்காம் இடம்➖ வட்டுவாகல் #உதயசூரியன் வி. க
🏆மூன்றாமிடம்➖ கோயிற்குடியிருப்பு #யங்கஸ் வி. க
📣போட்டித் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி கொளரவத்தினைப் பெற்றுக் கொண்ட வீரர்கள் மற்றும் விளையாட்டு கழகங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் 📢🙏🙏
📣மாபெரும் போட்டித் தொடர் முழுவதும் சிறப்பாக நடுவம் வகித்த முல்லைத்தீவு உதைபந்தாட்ட நடுவர்களுக்கும், வழிப்படுத்தியதுடன் போட்டிக்கான அனுமதியுடன் கூடிய ஒத்துழைப்புகளை வழங்கிய முல்லைத்தீவு கால்பந்தாட்ட சங்கத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் 📢🙏🙏
📣மாபெரும் போட்டித் தொடருக்கான முழுமையான நிதியனுசரணையினை வழங்கியிருந்த நாகமுத்து கிட்டினன் கிட்டினன் காந்தமலர் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் 📢🙏🙏
📣மாபெரும் உதைபந்தாட்ட போட்டித் தொடரினை மிகவும் சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்தி நடாத்தி முடித்திருந்த அளம்பில் இளந்தென்றல் விளையாட்டு கழக நிர்வாகத்தினர் உள்ளிட்ட கழக அங்கத்தவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் 📢🙏🙏