DMK Sports Development Wing - Perambalur

DMK Sports Development Wing - Perambalur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DMK Sports Development Wing - Perambalur, Sports Event, 30 Renga Nagar, 5th Cross (dead End), Perambalur.

24/08/2024

பெரம்பலூர் மாவட்டம்

2024 ஆம் ஆண்டின் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 02.09.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுடையோர் முன்பதிவு செய்யலாம்
– மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

--------------------------------------
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெரம்பலூர் மாவட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றவுடன் கடந்த ஆண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அப்போட்டிகளுக்காக மொத்த பரிசுத்தொகை ரூ.25.00கோடி உட்பட ரூ.59.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விளையாட்டுப்போட்டிகள் வெகுசிறப்பாக நடத்தப்பட்டது.

இந்த ஆண்டில் நடத்தப்பட இருக்கும் போட்டிகளில் வெவ்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 05 பிரிவுகளில் 27 விளையாட்டுகள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ளது.

இப்போட்டிகளில் மாநில அளவில் தனிநபர் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழுபோட்டிகளில் பங்கு பெற்று வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்தாண்டு தனிநபர் மற்றும் குழுபோட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு முதன் முறையாக நான்காம் இடம் பெற்றவருக்கு மூன்றாம் பரிசிற்கு இணையாக வழங்கப்படவுள்ளது.

மாண்புமிகு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் இவ்வாண்டுக்கான தனிநபர் மற்றும் குழப்போட்டிகளுக்கான மொத்த பரிசுத் தொகை ரூ. 37 கோடியாக உயர்த்தி வழங்கப்படவுள்ளது. போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும். தமிழ்நாடு முழுவதிலும் 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்களும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணாக்கர்களும், 15 வயது முதல் 35 வயது வரை பொது பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் பங்கேற்க 25.08.2024 அன்று முன்பதிவு செய்திட கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது 02.09.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல் https:/sdat.tn.gov..in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இணையதளம் வாயிலாக மட்டுமே முன்பதிவு செய்திட வேண்டும், நேரில் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தாங்களாகவோ தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவுசெய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களை 74017 03516 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலைநாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 05 மணிவரை 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

17/04/2024
பெரம்பலூர் நாடாளுமன்றத்தின் வெற்றி வேட்பாளர் திரு அருண் நேரு அவர்களுக்கு ஆதரவாகபெரம்பலூர் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பா...
07/04/2024

பெரம்பலூர் நாடாளுமன்றத்தின் வெற்றி வேட்பாளர் திரு அருண் நேரு அவர்களுக்கு ஆதரவாக

பெரம்பலூர் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பாக டீ களத்தூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பொழுது.

அது சமயம் நமது வெற்றி வேட்பாளருக்கு நினைவு பரிசு வழங்கி மறைந்த தருணம்.

Hurry up Guys, Limited Admission Just 3000 Rupees for 2 months summer coaching 👍
03/04/2024

Hurry up Guys,

Limited Admission

Just 3000 Rupees for 2 months summer coaching 👍

DPDA act 2023 has been violated ஒரு தனி நபரின் அனுமதி இல்லாமல் அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது முற்றிலும் சட்டத்திற்...
18/03/2024

DPDA act 2023 has been violated

ஒரு தனி நபரின் அனுமதி இல்லாமல் அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது முற்றிலும் சட்டத்திற்கு புறம்பான செயல்

டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், 2023 என்பது, தனிநபர்களின் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதற்கான உரிமையையும், சட்டப்பூர்வமாக அத்தகைய தனிப்பட்ட தரவைச் செயலாக்க வேண்டியதன் அவசியத்தையும் அங்கீகரிக்கும் வகையில், டிஜிட்டல் தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்கான இந்திய நாடாளுமன்றத்தின் ஒரு செயலாகும்.

12/01/2024

#அறிவிப்பு 🖤❤

நமது திராவிட முன்னேற்ற கழக தகவல் தொழில்நுட்ப அணி'யின் முன்னெடுப்பில் நாளை (13.01.2024 - சனிக்கிழமை) 10 மணி அன்று மாவட்டக் கழகங்கள் நடத்தும் மாவட்ட அளவிலான “சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு" நமது சின்னவர் உயர்திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு அமைச்சர் மாநில தகவல் தொழில்நுட்ப அணி'யின் செயலாளரும் - தமிழ்நாடு அரசின் தொழில் துறை அமைச்சருமான மாண்புமிகு அன்பு அண்ணன் உயர்திரு. TRB Rajaa M.L.A., அவர்களின் ஆலோசனைபடியும், நமது மேனாள் ஒன்றிய அமைச்சரும் - கழகத்தின் துணைப் பொதுச் செயலாளருமான மாண்புமிகு அண்ணன் உயர்திரு. A Raja B.Sc., M.L., M.P., அவர்களும் போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் திரு சா. சி. சிவசங்கர்., MLA., அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மதிப்பிற்குரிய அண்ணன் திரு. குன்னம் சி. இராஜேந்திரன் அவர்களின் ஒத்துழைப்புடன் மாநில செயலாளர் அண்ணன் திரு. கேசவன் பாலசுப்ரமணியன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள நமது அமைச்சர் அலுவலகத்தில் நடைபெறுகிறது..

இப்பயிற்சி வகுப்பில் அனைத்து மாநில - மாவட்ட கழக இளைஞர் அணி - மாணவர் அணி மகளிர் அணி - தொண்டர் அணி - தொழிலாளர் அணி வழக்கறிஞர் அணி - பொறியாளர் அணி - மருத்துவ அணி விளையாட்டு மேம்பாட்டு அணி - சிறுபான்மைநல உரிமைப் பிரிவு விவசாய அணி - விவசாயத் தொழிலாளர் அணி - சுற்றுச்சூழல் அணி - அயலக அணி உள்ளிட்ட கழக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக அறிவுறுத்தப்படுகிறது..

| | | 🖤❤

DMK Perambalur • DMK ITWing • DMK - Dravida Munnetra Kazhagam • DMK Youth Wing • Dmk Womens Wing • DMK StudentWings • DMK Legal Wing • DMK Medical Wing - திமுக மருத்துவ அணி • திமுக அயலக அணி DMK Nri Wing • DEW - DMK Environment Wing • DMK Farmer Wing •

Address

30 Renga Nagar, 5th Cross (dead End)
Perambalur
621212

Alerts

Be the first to know and let us send you an email when DMK Sports Development Wing - Perambalur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DMK Sports Development Wing - Perambalur:

Share

Category