Madurai Meenachi Amman Temple Chithirai Festival

Madurai Meenachi Amman Temple  Chithirai Festival Madurai Chithirai Festival-2015

 #மதுரை_அஷ்டமி_சப்பரம்-16.12.22 இன்று அதிகாலை        #அருள்மிகு  #மீனாட்சி_சுந்தரேசுவரர்_கடோரபாபி என்பவனுக்கு முக்தியளித...
16/12/2022

#மதுரை_அஷ்டமி_சப்பரம்-16.12.22 இன்று அதிகாலை
#அருள்மிகு #மீனாட்சி_சுந்தரேசுவரர்_கடோரபாபி என்பவனுக்கு முக்தியளித்தலீலை
(சகலஜீவ_ராசிகளுக்கும்_படியளந்த_லீலையாக சொல்வதும் உண்டு)
அருள்மிகு #மீனாட்சி_சுந்தரேசுவரர்_திருக்கோயில்
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

#அஷ்டமி_சப்பரம்_விழா- 2022

மதுரையம்பதியில் எழுந்தருளியுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் விழாக்களுக்கும் பஞ்சம் இல்லை. அனைத்து சுபதினங்களிலும் மாசி வீதிகள் களைகட்டும். அந்தவகையில் மார்கழி மாதத்தில், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளக்கும் விதத்தைக்குறிக்கும் நிகழ்ச்சியாகக் கருதப்படும் மதுரையில், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சார்பாக நடைபெறும் முக்கிய விழாக்களில் இதுவும் ஒன்று 'அஷ்டமி சப்பரம்' என்னும் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில், சுவாமியும் அம்மனும், மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் உலா வருவது வழக்கம்.
இந்நிகழ்ச்சி, அதிகாலை 5.30 மணிக்கு கோயிலிலிருந்து சுவாமி,அம்பாள் இருவரும் புறப்பாடாகி, மதுரையின் நான்கு வெளி வீதியில் வலம் வந்து, அங்கிருந்த சப்பரத்தில் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் சப்பரங்களில் அடியார்கள் கயிலாய வாத்தியம் முழங்க வீதியுலா வந்து, அம்மன் சப்பரத்தை பெண்கள் இழுப்பது தனிச்சிறப்பாகும். நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்த சப்பரத்தை ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்வர். மேலும், கீழே சிதறிக்கிடந்த அரிசியைக் கூடியிருந்த பக்தர்கள் எடுத்துக் கொண்டு வீடுகளுக்குச் செல்வர். திருவிழாவில் எடுக்கப்பட்ட அரிசியை வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால், அள்ள அள்ள அன்னம் கிடைத்து, பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கை. இந்த நிகழ்வுகான முக்கியமான வரலாற்றை பார்ப்போம்
ஒரு நாள் சிவபெருமானும், உமாதேவியாரும் ஏகாந்தமாயிருக்கும் சமயம் தேவி தாய்க்கேயுரிய கவலையுடன், ‘ஏன் சுவாமி! இவ்வுலகில் தோன்றிய உயிர்கள் இறக்கும் வரை துன்பத்திற்கும், பாவத்திற்கும் ஆளாகும் நிலை மாற வழியில்லையா? பிறப்பு, இறப்பின்றி முக்தி அடையவும், பாவங்கள் நீங்கவும் ஒரு வழி சொல்லுங்கள்’ என்றாள்.
அச்சமயம் உயிர்களுக்கெல்லாம் தந்தையான சிவபிரான் திருவாலவாய் எனப்படும் மதுரையின் சிறப்பை எடுத்துக் கூறியதோடு அஷ்டமி பிரதட்சிணம் பற்றியும் தேவிக்கு விரிவாக விளக்கினார். மதுரையில் வாழ்ந்து அஷ்டமி பிரதட்சிணம் செய்வோர்க்கு இகபர துன்பம் நீங்கி முக்தி கிடப்பது உறுதி என்றும் கூறினார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் திருமங்கலம் என்னும் ஒரு கிராமம் உள்ளது. அங்கு ஆத்ரேய கோத்திரத்தைச் சேர்ந்த பிராமணன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் வேத, வேதாந்த நூல்களைக் கற்று கரை கண்டவன். மிக்க அறிவாளி. கடவுள் பக்தி மிக்கவன். பிராமண நியதிகளிலிருந்து வழுவாது வாழ்ந்தவன். எனினும் அவன் மிகக் கொடியவன். பல தீய வழிகளில் பணம் சேர்ப்பவன். அவனைக் கண்டு மக்கள் அஞ்சி ஒதுங்கினர்.
அதே ஊரில் மற்றொரு பிராமணன் இருந்தான். அவன் கத்தரித் தோட்டம் வைத்து, அதில் விளையும் கத்தரிக் காய்களை விற்று வாழ்ந்து வந்தான். ஒரு நாள் கோயிலுக்கு சிவதரிசனம் செய்ய வந்த கத்தரிக்காய் பிராமணனை, பாவி பிராமணன் கண்டு அவனை வாயில் வந்த படியெல்லாம் பேசி, உதைத்து சுவாமி தரிசனம் செய்ய விடாது விரட்டி விட்டான். இதனால் மனம் நொந்த கத்தரிக்காய் பிராமணன் உடனே பாண்டிய ராஜனிடம் போய் முறையிட்டான். பாண்டிய மன்னன் உடன் அவனை அழைத்து கோபத்துடன் அவன் அப்படிச் செய்த காரணம் கேட்டான். உடன் பாபி, ‘அரசே, கத்தரிக்காய் மாமிசத்திற்கு ஒப்பானது. அதை உண்பது பாவம். ஆதலால், நான் அவனை ஆலயத்திற்கு வரவிடாது உதைத்து விரட்டினேன்’ என்றான். அதனைக் கேட்ட அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அரசனோ இதற்கு எப்படித் தீர்வு கூறுவதென குழம்பி நின்றான். அச்சமயம் அகத்திய மாமுனிவர் அரசவைக்கு வந்தார்.
அவரை வணங்கி நின்ற பாண்டிய மன்னன், “ஹே! குருதேவா! கத்தரிக்காய் பற்றிய வரலாற்றைக் கூறியருளுக” என வேண்டினான். அகத்தியரும், ‘முன்னொரு காலத்தில் வார்த்தாகன் என்னும் பெயருடைய ஒருவன் சிவபூஜை செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து கொண்டிருந்தான். அச்சமயம் வைகுண்டத்திலிருந்து கருடாரூடராக விஷ்ணு வந்தார். வார்த்தாகனோ விஷ்ணுவை கவனிக்காது சிவபூஜையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான். விஷ்ணு கோபித்து வார்த்தாகனை கற்ப முடிவு வரையில் ஒரு செடியாக மாறும்படியும், அச்செடியில் உண்டாகும் காயும் சாப்பிட ஏற்றதாகாது என்றும் சாபமிட்டு மறைந்தார்.
வார்த்தாகனோ தனக்கு ஏற்பட்ட சாபத்திற்கு பயந்து மேலும் சிவ பூஜை, அர்ச்சனை செய்தான். சிவபெருமான் தரிசனமளித்து, “உன் பூஜையால் மகிழ்ந்தோம். ஸ்ரீ விஷ்ணுவின் சாபத்திற்கு அஞ்ச வேண்டாம். உனது நாமசம்பந்தமான வார்த்தாகச் செடியில் விளையும் காயானது பிராமணர் சாப்பிட ஏற்றது, உனது கறியின்றி எனக்குச் செய்யும் பூஜை ஏற்புடையதாகாது. என் அன்பர்களுக்கு நீ விருப்பமுடையவனாவாய்.” என வரமளித்தார்.
எனவே வார்த்தாகக் காயெனப்படும் கத்தரிக்காய் சாப்பிடுவது தவறல்ல” என்றுரைத்து அகத்தியர் காசிக்குப் புறப்பட்டார். (வார்த்தாகன் விஷ்ணுவை அவமதித்த காரணத்தாலேயே அவருக்குகந்த ஏகாதசி, துவாதசி நாட்களில் கத்தரிக்காய் சாப்பிடுவது பாவம் எனக் கூறப்படுகிறது)
உடன் பாண்டிய ராஜன் பாவியாகிய பிராமணனைச் சிறையிலடைத்ததோடு, கத்தரிக்காய் பிராமணனுக்கு தன, தான்யங்கள் கொடுத்து உபசரித்து அனுப்பி வைத்தான். சிறையிலடைபட்ட பாவி அந்தணன் பசியால் வாடி சில நாளில் மரணமடைந்தான். மதுரையம்பதியில் மரணமடைந்ததால், அருகில் சிந்தாமணி எனும் கிராமத்தில் ஒரு இடையனுக்கு மகனாகப் பிறந்தான். முன்வினை காரணமாய் அவன் எப்பொழுதும் கொடிய செயல்களைச் செய்து கொண்டிருந்தான்.
அவன் முற்பிறவியில் சிறந்த சிவபக்தனாயிருந்த காரணம் பற்றி அவனுக்கு முக்தி கொடுக்க திருவுளம் கொண்டார் நம்ம சுந்தரேசப் பெருமான். மீனாட்சி தேவியை நோக்கி, ‘ஹே தேவி! பாவியாகிய அவ்விடையன் பல நற்காரியங்கள் செய்தவனாகையால் அவனுக்கு முக்தி கொடுக்க வேண்டும். நீ பசுவடிவம் எடுத்து அவன் தோட்டத்தில் பயிரை மேய்வது போலச் சென்றால், அவன் உன்னை அடிக்க துரத்தி வருவான். நீ இவ்வாலயத்தின் எல்லா வீதிகளையும் சுற்றி, நமது சன்னிதியருகில் வந்து அவனை இடபத்தின் பின் தள்ளிவிட்டு, பசுவுரு நீக்கி என்னருகில் வருவாய்’ என்று திருவாய் மலர்ந்தார்.
அன்னையும் சிவபிரான் ஆக்ஞைப்படி எல்லாம் செய்து முடித்தார். கீழே விழுந்தவுடன் இடையன் ஸ்தூல சரீரத்தை விட்டு சூக்கும சரீரத்துடன் தேவலோகம் சென்றான். அங்கு அவனுக்கு பார்வதி உடனுறை பரமேசுவரனாகக் காட்சி அளித்த எம்பெருமான்,
“உன்னால் செய்யப்பட்ட பாவங்கள் எல்லாம் என் கருணாசித்தத்தால் முற்றும் நீங்கி நீ சுத்தனாகி விட்டாய். இனி நீ கயிலையில் வசிப்பாய். உனக்கு முக்தி கொடுத்த இந்த அஷ்டமி திருநாளில் மதுரை பொற்றாமரைக் குளத்தில் நீராடி, நித்ய நியமங்களை நிறைவேற்றி, மனதில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேசரை தியானித்து, ஸ்ரீபஞ்சாட்சர ஜபத்தை வாயினால் ஓதிக் கொண்டு, மதுரையில் ஏழு வீதிகளை (வெளி வீதி, மாசிவீதி, ஆவணிவீதி,சித்திரை வீதி,ஆடி வீதி,சுவாமி சன்னதி 2 வீதி)
அனைத்து வீதிகளையும், பிரகாரங்களையும் வலம் வந்து, ஆலயத்திலுள்ள எழுந்தருளியுள்ள மூர்த்திகளையும் தரிசித்து, சந்நதியில் நமஸ்கரித்து, தங்கள் வீடு சென்று, தங்கள் வசதிக்கேற்ப நெய், தேன், தயிர் இவற்றோடு சிவபக்தர்களாகிய அந்தணருக்கு போஜனம் செய்வித்து, அவர்களது ஆசிகளைப் பெற்றால் அவர்களுக்கு முக்தியும், கைலாய வாசமும் கிட்டுவது உறுதி” என்றார்
எனவே, மார்கழி மாத சுக்லபட்ச அஷ்டமி திதியில் எவ்வூரில் இருப்பினும் அங்குள்ள சிவாலயத்தில் பிரதட்சிணம் செய்ய வேண்டும். இவ்வாறு பிரட்சிணம் செய்வதால் ஓர் அடிக்கு ஓர் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். வலம் வரும்போது எறும்புப் புற்றுகளுக்கு அரிசியிட வேண்டும். அவ்வாறு செய்தால் இலட்சம் பிராமணர்களுக்கு போஜனம் செய்த பலனை அடைவர். எவ்வளவு பாபம் செய்தவராயினும் அஷ்டமி பிரட்சிணத்தால் முக்தி அடைவர். மதுரையில் வாழ்வோர் கோயிலைச் சுற்றியுள்ள தைவீதி முதலாக ஏழு வீதிகளை வலம் வருதல் அவசியம். முடியாதவர் ஆடி வீதியையே ஏழுமுறை வலம் வர, ஏழு வீதியும் வலம் செய்த பயனை அடைவர். யராவது ஒரு சைவ சந்யாசிக்காவது அன்னதானம் செய்வது நல்லது. மேற்கூறியவாறு எம்பெருமானாகிய சுந்தரேசர் தன் திருவாக்கினாலேயே அன்னை மீனாட்சி தேவியாருக்கு உரைத்ததாக ஸ்கந்த புராணம் உரைக்கிறது.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
🌙சொக்கே⭐ நின் தாளே 👣துணை🙏🏻

 #அஷ்டமி  #சப்பரம்  தேர் திருவிழா -16.12.2022மீனாட்சி சுந்தரேஸ்வரர் சகலஜீவ ராசிகளுக்கும் படியளந்த லீலைமார்கழி மாத  #தேய்...
16/12/2022

#அஷ்டமி #சப்பரம் தேர் திருவிழா -16.12.2022
மீனாட்சி சுந்தரேஸ்வரர் சகலஜீவ ராசிகளுக்கும் படியளந்த லீலை
மார்கழி மாத #தேய்பிறை அஷ்டமி
கடோரபாபிக்கு முக்தி கொடுத்தருளிய லீலை

 #அஷ்டமி  #சப்பரம்  தேர் திருவிழா -16.12.2022மீனாட்சி சுந்தரேஸ்வரர் சகலஜீவ ராசிகளுக்கும் படியளந்த லீலைமார்கழி மாத  #தேய்...
15/12/2022

#அஷ்டமி #சப்பரம் தேர் திருவிழா -16.12.2022

மீனாட்சி சுந்தரேஸ்வரர் சகலஜீவ ராசிகளுக்கும் படியளந்த லீலை
மார்கழி மாத #தேய்பிறை அஷ்டமி

அனைவரும் வருக

 #கார்த்திகை    #லட்ச தீபம் #மீனாட்சியம்மன் கோவில்
06/12/2022

#கார்த்திகை #லட்ச தீபம்
#மீனாட்சியம்மன் கோவில்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்  #கார்த்திகை சோமவார  1008  #சங்காபிஷேகம்-28.11.2022
28/11/2022

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
#கார்த்திகை சோமவார 1008 #சங்காபிஷேகம்-28.11.2022

 #சொக்கநாதப்மெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலைமதுரை அருள்மிகு  #மீனாட்சி_சுந்தரேசுவரர்_திருக்கோயில் ஆவணி_மூலத்திருவிழா ...
06/09/2022

#சொக்கநாதப்மெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலை

மதுரை அருள்மிகு #மீனாட்சி_சுந்தரேசுவரர்_திருக்கோயில் ஆவணி_மூலத்திருவிழா 2022-9ம் நாள் 06.09.22

 #சோமசுந்தரப்பெருமான்_பிட்டுக்கு_மண்சுமந்தலீலை  #திருவிளையாடல்_புராணம்மதுரையை அரிமர்த்தன பாண்டியன் ஆண்டு வந்தான். அந்தச்...
06/09/2022

#சோமசுந்தரப்பெருமான்_பிட்டுக்கு_மண்சுமந்தலீலை
#திருவிளையாடல்_புராணம்
மதுரையை அரிமர்த்தன பாண்டியன் ஆண்டு வந்தான். அந்தச் சமயம் அரசாங்க நிதி கொடுத்து குதிரை வாங்கி வந்த எம்பிரான் மணிவாசக பெருமான் அழைத்து வந்த குதிரைகள் அனைத்தும் நரிகளாக மாற,கோபம் கொண்ட மன்னன் வைகை எம்பிரான் மணிவாசகரை தண்டிக்க ஆற்றின் சூடு மணலில் இட,சுவாமி சோமசுந்தரப் பெருமான் தனது திருவிளையாடலை அங்கு அரங்கேற்றும் பொருட்டு, வைகை நதியில் வெள்ளம் கரை புரண்டோடச் செய்தார்.
வானளாவிப் பெருகிவரும் வைகை ஆற்று வெள்ளம், கரையை உடைத்துக்கொண்டு மதுரையை அழிக்கும் அபாயம் ஏற்பட்டதால், பாண்டிய மன்னன் அமைச்சர்களைக் கலந்து ஆலோசித்தான். அந்த ஆலோசனையில், வீட்டுக்கு ஒருவர் மண் சுமந்து வைகைக் கரையை வலுப்படுத்தும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
மதுரை நகரின் கீழ்த் திசையில் வசித்து வருபவள் 'வந்தி’ என்னும் மூதாட்டி. இவள் பிட்டு சுடும் தொழில் செய்பவள். முதலில் சோமசுந்தரக் கடவுளுக்குப் பிட்டைப் படைத்துவிட்டுப் பின்னர்தான் ஏனையோருக்கு விற்பனை செய்துவந்தாள். வைகைக் கரையை வலுப்படுத்த மன்னன் ஆணைப்படி வீட்டுக்கு ஒருவர் சென்றனர். வந்தி, 'தனக்கு யாரும் இல்லையே’ என்று சோமசுந்தரக் கடவுளை நினைத்துக் கண்ணீர் மல்கினாள்.
அடியவர்க்கு அருளும் இறைவன், வந்திக்கும் அருள்செய்ய பிட்டுக்கு மண் சுமக்கும் கூலி ஆளாய் வந்தியிடம் வந்து சேர்ந்தார். கூலியாகப் பிட்டைப் பெற்றுக்கொண்ட இறைவன், மண்வெட்டியுடன் வைகை நதிக்கு வந்தார்.
வைகைக் கரைக்கு வந்த இறைவன், மண் சுமந்து கரையை வலுப்படுத்தாமல், நீரில் குதித்தும், மற்றவர்கள் சுமந்து வரும் மண்ணைக் கீழே தள்ளிவிட்டும், ஆடியும், பாடியும் தனது விளையாட்டைத் தொடங்கினார். இதைக் கவனித்த காவலர்கள், 'இவனுக்குப் பித்துப் பிடித்துவிட்டதோ?’ என நினைத்தனர். உடனடியாக மன்னனிடம் சென்று முறையிட்டனர்
வைகை நதிக்கு வந்த மன்னன் ஆத்திரம் அடைந்து, தனது தங்கப் பிரம்பால் இறைவனின் முதுகில் ஓங்கி அடித்தான். இறைவன் மீதுபட்ட பிரம்பு அடி, மன்னன் உட்பட உலக மக்கள் அனைவரின் மீதுமாக விழுந்தது. இந்திராதி தேவர்களையும் அந்த அடியின் வலி விட்டுவைக்கவில்லை. எல்லா உயிர்களுக்கும் அந்த அடி விழுந்தது.
அதன் பிறகு மறைந்துபோன இறைவன், நந்தி முதலிய கணாதிபர்களுடன் வானத்தில் தோன்றி வந்தி மூதாட்டிக்கு அருள் புரிந்து, அவளைத் தன்னோடு வானுலகம் அழைத்துச் சென்றார். சோமசுந்தரப் பெருமானின் இந்தத் திருவிளையாடலைக் கண்ட மன்னனும் மக்களும் இறைவனைத் தொழுது நின்றனர். மன்னன் எம்பிரான் மணிவாசகப் பெருமானை சிறையிலிருந்து விடுவித்தான்

 #நரியை_பரியாக்கிய_லீலை- 05.09.2022மீனாட்சி_சுந்தரேசுவரர்_திருக்கோயில்  #ஆவணித்_திருவிழா 2022 8ம்  திருநாள்
05/09/2022

#நரியை_பரியாக்கிய_லீலை- 05.09.2022

மீனாட்சி_சுந்தரேசுவரர்_திருக்கோயில் #ஆவணித்_திருவிழா 2022 8ம் திருநாள்

 #சுந்தரேசுவரர்_பட்டாபிஷேகம்- 04.09.2022 #மீனாட்சி_சுந்தரேசுவரர்_திருக்கோயில்
05/09/2022

#சுந்தரேசுவரர்_பட்டாபிஷேகம்- 04.09.2022
#மீனாட்சி_சுந்தரேசுவரர்_திருக்கோயில்

05/09/2022
Thanga pallakil Madurai Purapatta Kallalagar-17/04/19
17/04/2019

Thanga pallakil Madurai Purapatta Kallalagar-17/04/19

Meenachi Sundareshwar Thirukalyanam-17.04.19
17/04/2019

Meenachi Sundareshwar Thirukalyanam-17.04.19

Address

Natham
624401

Telephone

8870296543

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madurai Meenachi Amman Temple Chithirai Festival posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Madurai Meenachi Amman Temple Chithirai Festival:

Share