18/08/2026
*சாணார்பட்டி அருகே நாட்டு துப்பாக்கி வெடித்து வாலிபர் படுகாயம் - ஒருவர் கைது*
திண்டுக்கல் சாணார்பட்டியை அடுத்த அஞ்சுகுழிபட்டி சொக்கன்குளத்தை சேர்ந்த மாணிக்கம்(29) இவர் தனது உறவினர் சந்தனம்(38) உடன் வேட்டைக்கு செல்வதற்காக நாட்டுதுப்பாக்கியை தயார் செய்த போது திடீரென நாட்டுதுப்பாக்கி வெடித்தது இதில் மாணிக்கத்திற்கு வயிறு,நெஞ்சு உள்ளிட்ட உடலில் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மாணிக்கம் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தகவல் அறிந்த சாணார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து சந்தனத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்